புதன், ஜனவரி 11, 2012

பென்னி குயிக் சிலை: கருணாநிதி கடும் எதிர்ப்பு !


கர்னல் பென்னி குவிக் என்ற பொறியாளர் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் ஆவார். மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி அரபிக் கடலில் வீணாக கலந்து வந்த நீரை முல்லைப் பெரியாறு அணைக் கட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திருப்பி விட்டவர் பென்னி குவிக்.
இவருக்கு லோயர் கேம்ப் பகுதியில் ரூ 1 கோடி செலவில் உருவச்சிலையுடன் மணி மண்டபம் அமைக்கப்படும்" என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.


இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பிற்கு, முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில், பத்திரிகையாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியதாவது: "தானே புயல், முல்லை பெரியாறு அணை பிரச்னை, கூடங்குளம் விவகாரம் என பல்வேறு விவகாரங்கள் இருக்கும் போது, பென்னிகுயிக்கிற்கு மணிமண்டபம் கட்டப்படும் என்ற அறிவிப்பு தேவையில்லாதது.

2000-மாவது ஆண்டிலேயே, திமுக சார்பில் மதுரையில், பென்னி குயிக்கிற்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின்  இம்முடிவு அரசியல் ஆதாயத்திற்காகவே." என்று கருணாநிதி கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக