எஸ்பி. ரேங்கில் உள்ள ஆறு ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி பதவி அளித்து பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
2002-ஆம் ஆண்டில் குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் வேளையில் சட்டம் ஒழுங்கை பேணுவதில் வீழ்ச்சியை ஏற்படுத்திய ஆர்.ஜே.சவானியும் டி.ஐ.ஜியாக பதவி உயர்வு வழஙகப்பட்டுள்ளார். 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் டி.எஸ்.பியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளனர். டி.எஸ்.பி ரேங்கில் உள்ள ஏழு போலீஸ் அதிகாரிகள் பணி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மோடி அரசால் பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ள சதீஷ் வர்மா, மோடியின் போலீசாரால் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் என்கவுண்டரில் படுகொலைச் செய்யப்பட்டது போலியானது என்பதை கண்டறிந்த சிறப்பு புலனாய்வு குழுவில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை வேளையில் ஸவானி தனது பொறுப்பை உணர்ந்து செயல்படாமல் இனப் படுகொலைகளை கட்டுப்படுத்த தவறியதாக இனப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களுக்கான ஜன சங்கர்ஷ் மஞ்ச் என்ற அமைப்பும் குற்றம் சாட்டியிருந்தன. தற்பொழுது மெஹ்ஸானா எஸ்.பியான ஸவானி ரெயில்வே டி.ஐ.ஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளார்.
2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை வேளையில் ஸவானி துணை போலீஸ் கமிஷனராக பதவி வகித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக