சபாநாயகர் ஜெயக்குமார் வெளியிட்ட அறிவிப்பு: சட்டசபை மண்டபத்துக்குள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், பத்திரிகையாளர்கள், அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தங்களது கைப்பேசியை எடுத்து வரக்கூடாது. மேலும், எம்.எல்.ஏ.,க்கள் தங்களது கைப்பேசியை பத்திரமாக, மண்டபத்துக்கு வெளியே வைத்து விட்டு, சபைக்குள் செல்ல வசதியாக, புறாக்
கூண்டு அறைகள், பூட்டு, சாவி வசதியுடன், சட்டசபையின் மேல்புறம் மற்றும் கீழ்புற தாழ்வாரங்களில் வைக்கப்பட்டுள்ளன. எம்.எல்.ஏ.,க்களுக்கான இருக்கை எண்களைக் கொண்ட அறைகள் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. தங்களது இருக்கை ஒதுக்கீடு எண் கொண்ட, புறாக் கூண்டு சாவியை, நூலகப் பிரிவில் பெற்றுக் கொள்ளலாம்
. மேலும், பி.எஸ்.என்.எல்., ஸ்மார்ட் போன் கருவிகள், சட்டசபையின் மேல்புற மற்றும் கீழ்புற தாழ்வாரங்கள், ஆண்கள் மற்றும் பெண் உறுப்பினர்களது ஓய்வறைகள், கட்சிகளின் அறைகளது நுழைவாயில் மற்றும் மண்டபத்தின் பத்திரிகையாளர் மேல் மாடம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு வருடம் செல்லத்தக்க வகையில், 100 ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் கார்டு இலவசமாக வழங்கப்படும். அதில், 70 ரூபாய் வரை பேசிக் கொள்ளலாம். அதற்கு மேல், உறுப்பினர்கள் தங்களது சொந்த செலவில் ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு சபாநாயகர் அறிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக