இனப் படுகொலை நடக்கும் வேளையில் ஆனந்த் மாவட்டத்தின் ஒதே கிராமத்தில் அபயம் தேடிய 23 பேரையும் ஹிந்துத்துவா தீவிரவாத கும்பல் ஈவு இரக்கமின்றி காட்டுமிராண்டிகளை விட கொடூரமானவர்களாக மாறி தீவைத்து எரித்து படுகொலைச் செய்தனர்.
கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் குஜராத் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. குற்றம் சாட்டப்பட்ட 46 பேரில் 23 பேரை குற்றவாளிகள் என்றும் 23 பேரை விடுதலை செய்வதாகவும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.பி. சிங் அறிவித்தார்.
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை வேளையில் நிகழ்த்தப்பட்ட ஏராளமான படுகொலைகளில் 9 படுகொலை சம்பவங்களை மட்டும் விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்திருந்தது. இதில் ஓதே படுகொலை சம்பவமும் அடங்கும்.
ஏற்கனவே சர்தார்புரா கூட்டுப் படுகொலை வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக