செவ்வாய், ஏப்ரல் 10, 2012

ஹைதராபாத் கலவரம்: மௌலானா நசீருதீன் வீட்டுக்காவலில் !

naseerஹைதராபாத்:ஹைதராபாத்தில் நடந்த கலவரத்தில் காவல்துறை ஒருசார்புடன் நடந்துகொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதனை அறிவிக்கும் விதமாக மௌலானா நசீருதீனை காவல்துறை வீட்டுக்காவலில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கலவரத்தைத் தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள் மௌலானா நசீருதீனை காவல் நிலையத்திற்கு அழைத்து அவரை வீட்டினுள் இருக்குமாறு கூறியுள்ளனர்.

மௌலானா நசீருதீனை காவல்துறை அழைத்து பேசியதைத் தொடர்ந்து அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டது. மேலும் பத்திரிக்கையாளர்கள் அவரின் குடும்பத்தினரை அணுகியுள்ளனர். அவரின் குடும்பத்தினர் பத்திரிக்கைக்கு அளித்துள்ள செய்தியில் நசீருதீனை அழைத்து தற்போதைய சூழ்நிலைக் குறித்து  காவல்துறையினர் பேசியுள்ளனர் என்றனர்.
மேலும் காவல்துறை வழக்கம்போல் அப்துல் நயீம் ஜுனைத் மற்றும் முஹம்மத் இம்ரான்  என்னும் இரு முஸ்லிம் இளைஞர்களை காவல்துறை கைது செய்து அழைத்து சென்றுள்ளது என்றும் அவர்கள் தங்கள் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தனர் என்றும் அப்பகுதி மக்கள்  தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக