ஞாயிறு, ஏப்ரல் 08, 2012

சியாச்சின் பனிமலை சரிவு:135 பாக்.ராணுவத்தினர் மாயம் !

Siachen avalanche traps 124 soldiers, 11 othersஇஸ்லாமாபாத்:சியாச்சின் மலைக் குன்றுகளில் நிலவிய கடுமையான பனிப்பொழிவில் 135 பாக்.ராணுவத்தினரை காணவில்லை. இவர்களில் பெரும்பாலோர் மரணித்து விட்டதாக சில செய்திகள் கூறுகின்றன. இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான சியாச்சினில் கியாரி ராணுவ முகாமைச் சார்ந்தவர்கள் இந்த பனிப்பொழிவு விபத்தில்
சிக்கியுள்ளனர்.
காணாமல் போனவர்களில் ராணுவ கர்னலும் அடங்குவார். காணாமல் போன ராணுவத்தினரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மேஜர் ஜெனரல் அதர் அப்பாஸ் அறிவித்துள்ளார்.
உள்ளூர் நேரம் காலை ஆறு மணிக்கு ராணுவத்தினர் தங்கியிருந்த முகாமின் மேல்பகுதியில் பனிப்பாறைகள் விழத்துவங்கின.
உலகிலேயே மிகப்பெரிய பனிமலை உச்சிகளில் ஒன்றான சியாச்சினில் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சார்ந்த ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் முகாமிட்டுள்ளனர்.
இமாலயா மலைத் தொடரின் காரக்கோரம் பகுதியில் சியாச்சின் அமைந்துள்ளது. மீட்பு பணி மிகவும் சிரமமாக கருதப்படும் இப்பகுதியில் பாக்.ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. காணாமல் போன ராணுவத்தினரில் எவரேனும் உயிரோடு இருந்தால் அவர்களை கண்டுபிடிக்க சிறப்பு பயிற்சி பெற்ற நாய்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சோதனையை பூர்த்திச் செய்ய பல தினங்கள் தேவைப்படும் என்றும் எத்தனை பேர் இறந்தார்கள் என்று தற்பொழுது கூறவியலாது என்று ராணுவ செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
ஏராளமானோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதேவேளையில் அப்பகுதியில் இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பாக உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக