திங்கள், ஏப்ரல் 09, 2012

ஹைதராபாத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பஜ்ரங்தள் நடத்திய கலவரம் !

ஹைதராபாத் : புதிய ஹைதரபாத் நகரில் முஸ்லீம்கள் அங்குள்ள கோவிலின் உள்ளே மாட்டு கறியை தூக்கி போட்டதாக கூறி பஜ்ரங் தள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் முஸ்லீம்களின் வீடுகள் தாக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.
குர்மகுடா பகுதியில் உள்ள ஹனுமான் கோவிலில் உள்ளே மாட்டு கறி கிடந்ததாக கூறிய பஜ்ரங் தள் அமைப்பினர் முஸ்லீம்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு பேரணி நடத்தினர். பேரணியின் போது பஜ்ரங் தள் அமைப்பினர் கல் வீசி தாக்கியதில் பத்து வீடுகள் எரிக்கப்பட்டதோடு ஒன்பது நபர்கள் காயமடைந்துள்ளனர்.
பஜ்ரங் தள் அமைப்பினர் சில பெண்களின் உடைகளை கிழித்ததோடு பெட்ரோல் குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்திய போது காவல்துறையினர் வேடிக்கை பார்த்ததாக சிறுபான்மை
சமூகத்தை சார்ந்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். முறையாக விசாரணை நடத்தி தாக்குதலை நடத்தியவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனும் பாதிக்கப்பட்டவர்களின் ஆசை நிறைவேறுமா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக