இவ்விருவரிடையே இருநாடுகள் இருதரப்பு குறித்து ஆலோசனை நடத்தப் பட்டது. இது குறித்து இந்திய பிரதமர் மன்னோகன்சிங் நிருபர்களிடம் கூறுகையில், "பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்தது. பாகிஸ்தான் வருமாறு ஜர்தாரி விடுத்த வேண்டுகோளை
ஏற்றுக் கொண்டுள்ளேன்" எனத் தெரிவித்தார்
மேலும் இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி,எங்களிடையே நடந்த பேச்சுவார்த்தை மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இருந்தது என்றும், இந்தியா-பாகிஸ்தானிடையே உள்ள உரவு மேலும் வலுப்பெறும் என்றும் கூறினார்.விரைவில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை பாகிஸ்தானில் சந்திப்பேன் எனவும் சர்தாரி கூறினார்.
இவ்விருவரிடையே நடைபெற்ற சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்ததாக கூறப் படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக