செவ்வாய், ஜனவரி 10, 2012

மாட்டுக்கறி சாப்பிட்ட தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்கள் !


"ஜெ" யை கட்சிக்குள் எம்.ஜி.ஆர் கொண்டு வரும் போது பலத்த எதிர்ப்பு நிலவியது. அதற்க்கு எம்.ஜி.ஆர். உங்களில் எத்தனை பேர் மாட்டுக்கறி சாப்பிடுவீர்கள் என்று தெரியாது. ஆனால் அம்மு ( ஜெயலலிதா) ஸ்பெ‌ன் ச‌ரி‌லிரு‌ந்து   ஸ்பெஷ‌ல் ‌பீஃ‌ப்  வா‌ங்‌கி என‌க்கு சமை‌ச்‌சி‌க் கொடு‌த்‌திரு‌க்கு. மா‌ட்டு‌க்க‌றி சா‌ப்‌பிடுற அ‌ம்முவை எ‌ப்படி ‌பிரா‌மி‌ன்னு நினை‌க்‌கி‌றீ‌‌‌ங்க’‌ன்னு சொ‌ன்னா‌ர்.  இதைத்தான் ஜெ தனது கட்சி நிர்வாகிகளிடம் கூறி இருக்கிறார், "இ‌‌ன்னைக‌்கு கருணா‌நி‌தியு‌ம்,‌வீரம‌ணியு‌ம் நா‌ன் ‌பிரா‌மி‌ன்னு‌ம் எ‌ன் கூட இரு‌க்‌கிறவ‌ங்களை ம‌யிலா‌ப்பூ‌ர் மாஃ‌பியா‌ன்னு‌ம் சொ‌ல்றா‌ங்க”எ‌ன்றபடி ச‌ி‌ரி‌த்‌திரு‌க்‌கிறா‌ர்” ஜெ இதை செய்தியாக வெளியிட்ட நக்கிரனுக்குத்தான் கல்லடி. தனது அதிமுக கட்சி அடிமைகளிடம் சொன்னதை  தங்கள் ஹிந்துத்துவா நண்பர்கள் அறிய செய்து விட்டதே இந்த நக்கீரன் என்ற கோபம் போலும்.

"ஜெ" மாட்டு கறி சாப்பிடுவதால் அவர் இமேஜ் ஒன்றும் குறைந்து போகாது. தமிழக மக்களில் பெரும்பான்மையினர் விரும்பி உண்ணும் ஒரு உணவைதான் அவரும் சாப்பிட்டுள்ளார். இதனால் அவர் வருத்தப்பட தேவையில்லை. ஜெ மற்றும் சசி கலாவை இணைத்து கேவலமாக சில பத்திரிக்கைகள் எழுதின அதற்காக இவர் வருத்தப்பட்டிருந்தால் அதில் நியாயம் இருக்கிறது. இதற்காக அவரும் அவரது தொண்டர்களும் ஆவேசப்பட  அவசியம் இல்லை.

இனிமேல் "ஜெ" மாட்டுக்கறி ரகசியமாக சாப்பிட தேவையில்லை பகிரங்கமாக அதை சாப்பிடலாம். ஏழை, எளிய மக்களின் திடகாத்திர உணவான மாட்டு கறியை சாப்பிடுவதில் என்ன வெட்கம், அவமானம். இதை பகிரங்கமாக செய்வதன்  மூலம் முதல்வர் ஏழை, எளிய மக்களோடு தன்னை இணைத்து  கொண்டவர் ஆகிறார். இதனால் அவரது செல்வாக்கு இன்னும் மக்கள் மத்தியில் உயருமே தவிர குறையாது. 

தமிழகத்தின் முதல்வராக இருக்கும் ஒருவரே ஏழை, எளிய மக்களின் உணவை சாப்பிடுவதை கேவலமாக கருதுவது முறையல்ல. சில மக்கள் மாட்டுகறி சாப்பிடுவார்கள் ஆனால் அதை வெளியே சொல்ல வெட்கப்படுவார்கள்.  ஹிந்துத்துவால் வர்ண அடிப்படையில்  கீழ்ஜாதி மக்கள் என்று சொல்லபடுபவர்கள் சாப்பிடும் ஒரு உணவை தாங்களும் சாபிட்டால் அது கெளரவ்  குறைச்சல் என்று சிலர் தவறுதலாக அர்த்தம் விளங்கி வைத்துள்ளனர். 

மனிதர்களில் ஏது கீழ்ஜாதி மேல்ஜாதி இது வர்ணாசிரமம் உண்டாக்கிய சதி வலை. உணவுகளில் ஏது மேல்ஜாதி உணவு கீழ்ஜாதி உணவு என்றெல்லாம் எல்லாம் ஒன்றுதான். அவர் அவர்களுக்கு பிடித்ததை சாப்பிட வேண்டியதுதான் உணவிலுமா ஜாதி வேறுபாடு. செத்த மாட்டை உணவாக உட்கொள்ள எடுத்து சென்ற தலித் மக்களை எரித்து கொன்றவர்கள்தான் இந்த வர்ணாசிரம் வெறியர்கள். 

மாட்டுக்கறி சாப்பிடுவதை கேவலமாக நினைப்பது இந்தியாவில் மட்டும் தான். உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் பணக்காரர்களின் முக்கிய உணவு மாட்டுக்கறி. அவர்கள் விருந்தில் மாட்டுக்கறி முக்கிய அங்கம் வகிக்கும். இது தெரியாமல் நமதூர் மக்களில் பலர் மாட்டிறச்சியை ரகசியமாக வாங்குவது, சமைப்பது இது அவசிய மற்ற ஒரு செயலாகவே தோன்றுகிறது. மொத்தத்தில் விரும்புபவர்கள் அதை வெளிப்படியாக் சாப்பிடலாம் இதற்க்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் தேவையில்லை.
நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.

1 கருத்து: