ஞாயிறு, மார்ச் 09, 2014
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணி 5–வது முறையாக சாம்பியன்
ஆசிய கிரிக்கெட்
12–வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் இரண்டு வார காலமாக நடந்து வந்தது. 5 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியா, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. இலங்கை, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணிகள் இறுதிசுற்றுக்கு முன்னேறின.
சனி, மார்ச் 08, 2014
மலேசிய விமானம் மாயமானது: 239 பயணிகள் கதி என்ன ? சீனா சென்றபோது விபரீதம்
கோலாலம்பூரில் இருந்து பீஜிங் புறப்பட்ட பயணிகள் விமானம்
உரிய நேரத்தில் போய்ச்சேராமல் மாயமானது. இதில் இருந்த 239 பயணிகள் கதி என்ன
ஆனாது என்று தெரியாமல் இருந்தது. இதற்கிடையில் வியட்னாம் விமான சிக்னல்
கட்டுப்பாட்டு அறைக்கு இந்த விமானம் கடலில் விழுந்ததாக தெரியவந்துள்ளது.
கோசு தீவு அருகே இந்த விமானம் விழுந்துள்ளது. இதில் இருந்த பயணிகள்
அனைவரும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ
இடத்திற்கு வியட்னாம் கடற்படையை சேர்ந்த கப்பல்கள் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன.
ஜெயலலிதா– மம்தா உருவாக்கும் புதிய அணி....
இடதுசாரி கட்சிகள் விலகியதால் ஜெயலலிதாவும் மம்தா பானர்ஜியும் இணைந்து புதிய அணி உருவாக்க முடிவு செய்துள்ளனர்.
பாராளுமன்ற
தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகள் இடம் பெற்று
இருந்தன. இரு கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு
ஏற்படாததால் கம்யூனிஸ்டு கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து
வெளியேறிவிட்டன.
ஆசிய சாம்பியன் : பைனலில் இலங்கை, பாக்., மோதல்
ஆசிய கோப்பை பைனலில் இன்று இலங்கை அணி ‘நடப்பு சாம்பியன்’ பாகிஸ்தானை சந்திக்கிறது.
வங்கதேசத்தில் ஐந்து நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகள், லீக் போட்டியுடன் திரும்பின. இன்று நடக்கும் பைனலில், ‘நடப்பு சாம்பியன்’ பாகிஸ்தான் அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.
இந்திய மாணவர்களுக்கு பாக., அழைப்பு : இந்தியா ஆட்சேபம்
இந்திய மாணவர்களுக்கு ஆதரவளிப்பதாக பேசிய பாகிஸ்தானிற்கு இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கற்களை எறிய வேண்டாம் என தெரிவித்துள்ளது.வங்கதேசத்தில் கடந்த ஞாயிற்றுகிழை இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியை உ.பி., மாநிலம் மீரட் நகரில் உள்ள சுவாமி விவேகானந்த் சுபார்த்தி பல்கலை மாணவர்கள் கண்டு களித்து கொண்டிருந்தனர். இப்பல்கலை கழகத்தில் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர்களும் கல்வி பயின்று வருகின்றனர்.
முன்னாள் மலேசிய பிரதமர் விடுதலை செல்லாது மலேசியா மேல்முறையீடு கோர்ட் தீர்ப்பு
மலேசியாவின்
முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சி தலைவருமான அனவர் இப்ராஹிம் இவர் தனது
ஆண் உதவியாளருடன் ஹோமோ செக்ஸ் உறவு வைத்து கொண்டார் என குற்றம்சாட்டபட்டது.
மலேசிய சட்டபடி இது கிரிமினல் குற்றமாகும் . இது தொடர்பாக அவர் மீது
கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கில் அவர் குற்றமற்றவர் என கோர்ட்
தீர்ப்பளித்தது இதை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்தது. தற்போது
கோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்து அந்நாட்டின் மேல்முறையீட்டு நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளது.
வடகொரியா மூத்த ராணுவ அதிகாரி நீக்கமா? புதிய சர்ச்சை பரவுகிறது
வடகொரியா நாட்டு அதிபராக கிம் ஜாங் யூன் பதவி வகிக்கிறார். கடந்த ஆண்டு
ராணுவ மூத்த தளபதியாக இருந்த அவரது தாய் மாமா சோங் தாயிக் மரண தண்டனை
விதிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அதை அடுத்து சோயி ரியாங் ஹா என்பவர் ராணுவ
துணை மார்ஷலாக நியமிக்கப்பட்டு அதிபருக்கு அடுத்த இடத்திற்கு
உயர்த்தப்பட்டார். இவர் சிறப்பு தூதராக சீனாவுக்கு சென்று திரும்பினார்.
தேர்தல் மைதானத்தில் அரசியல் கட்சிகள்
ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொள்பவர்களுக்கும், அதைப்பார்ப்பவர்களுக்கும் நன்றாக தெரியும். ஓட்டப்பந்தயம் தொடங்குவதற்கு முன்பு, வீரர்கள் அனைவரும் மைதானத்தில் நிற்பார்கள். ‘ஆன் யுவர் மார்க்’ என்று நடுவர் சொன்னவுடன் பந்தயம் தொடங்குவதற்காக போடப்பட்டிருக்கும் கோட்டின் அருகே நிற்பார்கள். ‘செட்’ என்று சொன்னவுடன் கோட்டின் முன் காலை வைத்து எந்த நேரத்திலும் ஓட தொடங்குவதற்கு துடிதுடிப்புடன் தயாராக இருப்பார்கள். ‘கோ’ என்று நடுவர் சொன்னவுடன், ஓடதொடங்குவார்கள். ‘பினிஷிங் லைன்’ என்று கூறப்படும் பந்தயம் முடிவாகும் இடத்தில் போடப்பட்டுள்ள கோட்டையார் முதலில் தாண்டுகிறார்களோ, அவர்கள் வெற்றி பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.
வெள்ளி, மார்ச் 07, 2014
6 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவேண்டாம்: நடிகை ரீமா கல்லிங்கல் கருத்து
கேரள கவர்னராக இருந்த நிகில்குமார் ராஜினாமா செய்ததை தொடர்ந்து கேரளாவின் புதிய கவர்னராக ஷீலா தீட்சித் நியமிக்கப்பட்டார்.
இவர் வருகிற 10–ந்தேதி கேரளா வருகிறார். 12 அல்லது 13–ந்தேதி கேரள கவர்னராக பொறுப்பேற்க உள்ளார். கேரளாவில் கவர்னர் பதவி வகிக்க ஆர்வமாக இருப்பதாகவும், கேரளாவில் தங்க இருப்பதில் மகிழ்ச்சி அடைந்ததாகவும் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.
ஆப்கன் அதிபரின் பெண்குழந்தை இந்திய மருத்துவமனையில் பிறந்தது
கடந்த செவ்வாய்க்கிழமையன்று காலை 9.30 மணி அளவில் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாயின் பெண்குழந்தை இந்தியாவின் குர்கான் பகுதியில் உள்ள போர்டிஸ் மெமோரியல் ஆய்வு மருத்துவமனையில் பிறந்தது. புதன்கிழமையன்று இலங்கைக்கு செல்லும் வழியில் இந்தியா வந்த அதிபர் ஹமீத் கர்சாய் மருத்துவமனைக்குச் சென்று தனது மனைவியையும், மகளையும் பார்த்துவிட்டுச்சென்றார்.
வியாழன், மார்ச் 06, 2014
கைதட்டலுக்கு தேசத் துரோக வழக்கு?
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதை கைதட்டி வரவேற்ற ஜம்மு காஷ்மீர் மாணவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் மீரட் சுவாமி விவேகானந்த் சுபார்தி பல்கலைக் கழகத்தில் ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த வாரம் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது.
உக்ரைன் விவகாரம்: ரஷ்யாவிற்கு எதிராக 'லைவ்' ஆக வேலையை உதறிய செய்தியாளர்!....
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா டுடே தொலைக்காட்சி செய்தியாளர் தனது வேலையை ராஜினாமா செய்வதாக நேரடி ஒளிபரப்பில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். உக்ரைனின் க்ரைமியா பகுதியில் ரஷ்ய படைகள் புகுந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் ஏதும் இல்லை என்ற புதினின் அறிவிப்பு பதற்றத்தை சற்று தணித்துள்ளது.
புதன், மார்ச் 05, 2014
இரையும்,வேட்டைக்காரனும்- அன்ஸாரி,அஷோக் மோச்சி!...
2002 ஆம் ஆண்டு குஜராத்தில் மாநில முதல்வர் மோடியின் ஒப்புதலோடு சங்பரிவாரம் தலைமையில் நடத்தப்பட்ட முஸ்லிம் இனப்படுகொலையின் அடையாளமாக உலக மக்களிடையே நீங்கா இடம் பெற்ற இரு புகைப்படங்கள் பிரசித்தமானவை!
ஒன்று, கொலை செய்யும் வெறியுடன் பாய்ந்துவரும் சங்பரிவார பயங்கரவாதிகளிடம் தம்மை விட்டுவிடுமாறு கண்களில் மரண பயத்தோடு கண்ணீருடன் கைகூப்பி கெஞ்சும் தையல் தொழிலாளியான குத்புதீன் அன்ஸாரியின் புகைப்படம்!
மற்றொன்று, முஸ்லிம்களைக் கொன்றொழிக்க கையில் வாள் மற்றும் சூலாயுதம் ஏந்தி ஆக்ரோஷ வெறியுடன் பாயும் செருப்பு தைக்கும் தொழிலாளியான அஷோக் மோச்சியின் புகைப்படம்!
உக்ரைன் விவகாரம்: ஜெர்மனி, இங்கிலாந்துடன் அமெரிக்கா ஆலோசனை....
உக்ரைன் நாட்டில் ரஷிய ராணுவம் குவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி பிரதமர்களுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆலோசனை நடத்தினார். உக்ரைன் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து, ரஷியாவின் அனுதாபியாக இருந்த விக்டர் யானுகோவிச் தூக்கி எறியப்பட்டார். இதனால், ஆத்திரமடைந்த ரஷியா, உக்ரைனின் கிரீமியா என்ற இடத்தை கைப்பற்றி, அங்கு தனது ராணுவத்தை குவித்தது.
ஞாயிறு, மார்ச் 02, 2014
ஆப்கானிஸ்தானிடம் தோற்றது அவமானம்: வங்கதேச கேப்டன்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வங்காளதேசத்தை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன் எடுத்தது. அஸ்கர் 103 பந்தில் 90 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்), சமியுல்லா 69 பந்தில் 81 ரன்னும் (10 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். அரபாத் சன்னி 2 விக்கெட் கைப்பற்றினார்.
இரட்டை நீதியா?,, மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி..
நடிகர் சஞ்சய் தத்துக்கு தொடர்ந்து வழங்கப்படும் பரேல் ஏன்? என மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தனது மகள் இறப்புக்கு செல்ல அனுமதி கோரி நகுல் என்பவர் தாக்கல் செய்த மனு மும்பை உயர் நீதிமன்ற நாகபுரி கிளை நீதிமன்றத்தின் நீதிபதிகள் பூஷண் கவாய், அதுல் சந்துர்கர் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
சனி, மார்ச் 01, 2014
கோமா நிலையில் வக்பு வாரியம் : பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மாயம்!
ஒவ்வொரு சமுதாய மக்களும் தங்களுக்கான சமூக, பொருளாதாரப் பாதுகாப்பிற்கான திட்டங்களை தாங்களே உருவாக்கி, அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும் என்பது தான் இன்றைய நடைமுறையாக உள்ளது. அந்தந்த சமுதாயத்தில் உள்ள சமூக ஆர்வலர்களுக்கும், படித்தவர்களுக்கும் இது தொடர்பாக பெரும் பொறுப்பும் கடமையும் இருக்கிறது.
இந்த 5 சீட்டும் கண்டிப்பாக வேண்டும்- பாஜகவிடம் மதிமுக திட்டவட்டம் !,,,
தான் கேட்டுள்ள தொகுதிகளில் குறிப்பிட்ட ஐந்து தொகுதிகளை யாருக்காகவும் விட்டுத் தர முடியாது என்று பாஜகவிடம் திட்டவட்டமாக கூறியுள்ளதாம் மதிமுக. இந்த ஐந்து தொகுதிகள் தங்களுக்குக் கண்டிப்பாக வேண்டும் என்றும், இதை சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் மதிமுக கூறியுள்ளதாம். தேமுதிக, பாமக ஆகியவை பாஜக கூட்டணிக்குள் வரும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளதால், அவர்களுக்காக தங்களது தொகுதிகளைக் காவு கொடுக்க மதிமுக தயாரில்லை என்பதையும் பாஜகவிடம் தெளிவுபடுத்தியுள்ளாராம் கட்சிப் பொதுச் செயலாளர் வைகோ.
ஆம் ஆத்மியில் உதயகுமாரன் - 'எளிய மக்கள் கட்சி' என்ற பெயரில் ஆம் ஆத்மி இயங்கும்!
இடிந்தகரை: ஆம் ஆத்மி கட்சியில் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் உள்ளிட்ட சிலர் இணைந்துள்ளனர். இந்தக் கட்சி தமிழகத்தில் எளிய மக்கள் கட்சி என்ற பெயரில் இயங்கவுள்ளது. இதனை இடிந்தரையில் இன்று செய்தியாளர்களிடையே அறிவித்தார் உதயகுமாரன்.இதுதொடர்பாக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)