சனி, மார்ச் 08, 2014

பட்டினி போட்டு பெண் கொலை: மலேசிய தம்பதிக்கு தூக்கு தண்டனை



மலேசியாவைச் சேர்ந்தவர் பாங்காங் மெங் (58). இவரது மனைவி தியோக் சிங்க்யென் (56). இவர்களது வீட்டில் இந்தோனேசியாவைச் சேர்ந்த இஸ்தி கொமரியா (26) என்ற பெண் வேலை செய்தார்.


அவரிடம் கடுமையாக வேலை வாங்கிய இவர்கள் சரிவர சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்டனர். மேலும் அப்பெண்ணை அடித்து உதைத்து காயப்படுத்தி சித்ரவதை செய்தனர்.

ஒரு கால கட்டத்தில் வேலைக்கார பெண் இஸ்தி கொமரியாவின் உடல்நிலை மோசமடைந்தது. உடலில் ஏற்பட்ட காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார்.

3 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது வீட்டில் வேலைக்கு சேர்ந்தபோது இஸ்தி கொமரியா 46 கிலோ எடை இருந்தார். ஆனால் அவர் இறக்கும்போது 20 கிலோ எடை குறைந்து 26 கிலோ இருந்தார். அந்த அளவுக்கு பட்டினி போட்டு அவரை இவர்கள் கொடு மைப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவத்துக்காக பாங்காங் மெங், அவரது மனைவி தியோ சிங்க் யென் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த கோர்ட்டு கணவன்–மனைவி இருவருக்கும் தூக்கு தண் டனை விதித்து தீர்ப்பளித்தது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக