சனி, மார்ச் 08, 2014

ஜெயலலிதா– மம்தா உருவாக்கும் புதிய அணி....


இடதுசாரி கட்சிகள் விலகியதால் ஜெயலலிதாவும் மம்தா பானர்ஜியும் இணைந்து புதிய அணி உருவாக்க முடிவு செய்துள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகள் இடம் பெற்று இருந்தன. இரு கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கம்யூனிஸ்டு கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டன.


கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா ஒரு மேல் சபை எம்.பி. பதவியை அ.தி.மு.க. விட்டுக்கொடுத்தது. அதேபோல் பாராளுமனற தேர்தலில் தலா ஒரு தொகுதி தர அ.தி.மு.க. முன்வந்தது. ஆனால் கூடுதல் தொகுதிகள் கேட்டு கம்யூனிஸ்டுகள் பிடிவாதம் பிடித்ததாலும் அ.தி.மு.க. அதை ஏற்க மறுத்ததாலும் கம்யூனிஸ்டு கட்சிகள் பிரிந்துவிட்டன.


கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் பிரகாஷ் காரத், ஏ.பி. பிரதன் உள்ளிட்டோர் முன்பு முதல்– அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து தேசிய அளவில் தாங்கள் உருவாக்கும் அணிக்கு அழைப்பு விடுத்தனர். இதை ஏற்று அ.தி.மு.க. பிரதிநிதியாக தம்பித்துரை 3–வது அணி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

ஆனால் தமிழகத்தில் திடீர் என்று கம்யூனிஸ்டு கட்சிகள் வெளியேறியதால் தேசிய அளவிலான 3–வது அணியிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்டு கட்சிகள் விலகிய நிலையில் மேற்கு வங்காள முதல்–மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், முதல் – அமைச்சர் ஜெயலலிதாவைப் பாராட்டினார். ஜெயலலிதா நிர்வாக திறமை மிக்கவர். அவர் பிரதமராக விரும்பினால் ஆதரவு தரத்தயார். ஏற்கனவே தாங்கள் இருவரும் பணியாற்றி இருக்கிறோம். மீண்டும் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம் என்றார்.

இதையடுத்து முதல்– அமைச்சர் ஜெயலலிதா மம்தா பானர்ஜியுடன் தொலபேசியில் தொடர்பு கொண்டு பேசி நன்றி தெரிவித்தார். இருவரும் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்கள் தெரியவில்லை.
மம்தமா பானர்ஜியும், ஜெயலலிதாவும் பாராளுமன்ற தேர்தல் பற்றியும், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கான வாய்ப்புகள் பற்றியும் இரு தலைவர்களும் பேசியதாக திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

கம்யூனிஸ்டுகள் உருவாக்கிய 3–வது அணியில், பீகார் முதல் – மந்திரி நிதிஷ் குமார், ஒடிசா முதல் – மந்திரி, நவின் பட்நாயக், மாயாவதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி ஆகியோர் இடம் பெறவில்லை. இதனால் அந்த கூட்டணி பலமானதாக இல்லை.

எனவேதான் கம்யூனிஸ்டுகள் விலகியதால் ஜெயலலிதாவும், மம்தாவும் இணைந்து நிதிஷ்குமார், நவீன்பட்நாயக், மாயாவதி, ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோரை இடம் பெற செய்து புதிய அணி உருவாக்கி தேர்தலுக்குப் பின் முக்கிய பங்கு வகிப்பது என முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக