பெண்கள் உரிமைக்காக போராடிய குலாபி காங் கை மையமாக வைத்து எடுக்கப்பட்ட
மாதுரி தீட்சித்தின் "குலாப் காங்" திரைப்படம் நாளை திரையிடப்படுகிறது.
இந்த திரைப்படம் எங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. என்னிடம்
தயாரிப்பாளர்கள் அனுமதி கேட்கவில்லை. எனவே "குலாப் காங்" படத்திற்கு தடை
விதிக்க வேண்டும் என்று கோரி சம்பத் பால் என்பவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல்
செய்தார்.
சம்பத் பால் சில காட்சிகள் அவரது நற்பெயரை பாதிக்கும் விதமாக
உள்ளது என்றும் உண்மைக்கு மாறாக உள்ளது என்றும் நிதி இழப்பீடு வழங்க
வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
அவரது மனு மீதான விசாரணையின் போது
நேற்று கோர்ட்டு படத்தை வரும் 8-ம் தேதிவரையில் திரையிடுவதற்கு இடைக்காலத்
தடை விதித்தது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும்
என்று கோர்ட்டை நாடினார். பின்னர் அவர்கள் தரப்பு விவாதத்தை கேட்ட கோர்ட்டு
படத்தை திட்டமிட்டபடி நாளை திரையிட அனுமதி அளித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக