ஞாயிறு, மார்ச் 09, 2014

ஆப்கானிஸ்தான் துணை அதிபர் மரணம்

ஆப்கானிஸ்தான் துணை அதிபர் முஹம்மது காசிம் ஃபாஹிம்(57) உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததாக ஆப்கான் அரசு அறிவித்துள்ளது.
அதிபர் ஹமித் கர்சாய்க்கு துணையாக ஆட்சி பொறுப்பை நிர்வகித்து வந்த இவர் ராணுவ வட்டாரத்தில் செல்வாக்கு நிறைந்த நபராக கருதப்பட்டார்
 
மார்ஷல் என்ற அடைமொழி பெயருடன் அழைக்கப்படும் முஹம்மது காசிம் ஃபாஹிம், 2001-ம் ஆண்டு தலிபான்களின் ஆட்சி ஒழிக்கப்பட்ட பின்னர் அமெரிக்காவின் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானின் முதல் துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 3 நாள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ள அதிபர் மாளிகை, தேசிய கொடிகளையும் அரை கம்பத்தில் பறக்க விடுமாறு உத்தரவிட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக