முத்துச்செல்வி உள்பட கட்சிப் பதவியில் இருந்து 4 அதிமுக எம்.எல்.ஏக்களை நீக்கியுள்ளார் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் உள்ள மொளச்சூர் இரா.பெருமாள் எம்.எல்.ஏ, திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்டம் சங்கரன் கோவில் நகர 16-வது வார்டு இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் பொறுப்பில் உள்ள எஸ்.முத்துச்செல்வி எம்.எல்.ஏ. ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் அதிமுக எம்.எல்.ஏவான முத்துச்செல்வி இன்று சர்ச்சை நாயகியாக மாறி வருகிறார். முத்துச்செல்வியையும், குழந்தைகளையும் ஜெயலலிதா பேரவை பிரமுகர் அபகரித்துக் கொண்டதாக முத்துச்செல்வியின் கணவரே கட்சித் தலைமையிடம் புகார் கூறியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக