சனி, ஏப்ரல் 07, 2012

மக்களுடைய பணத்தை மானாவாரியாக செலவு செய்யும் பிரதிபா பாட்டில் !

   இந்தியாவில் ஒருவன் ஒரு நாளைக்கு ரூபாய் 28/- சம்பாதித்தால் போதுமானது. அவன் ஏழை இல்லை, அவன் வறுமை கோட்டிற்கு மேலே தான் உள்ளான் (இது நம்ம இந்தியாவின் திட்டக்கமிஷனின் சமீபத்திய அறிக்கை), மக்களின் வரிப்பணங்கள் வீணாக்கப்பட்டுவரும் வேளையில் இது போன்ற கேளிக்கூத்தான அறிக்கைகள் வெளிவருவரத்தான் செய்யும். இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது, பட்னிச்சாவுகளும், வேலையில்லா திண்டாடங்களும், அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றமும், பிச்சை எடுப்பவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டு போனாலும் அதுபற்றிய கவலையெல்லாம் எங்களுக்கு இல்லை ஏனென்றான் நாங்களலெல்லாம் தலைவர்கள் என்ற ரீதியில் மக்களின் வரிப்பணங்களை தண்ணீராக செலவழித்துக்கொண்டிருக்கிறார்கள் நம்முடைய அரசியல் தலைவர்கள்.

சமீபத்தில் காதில் விழுந்த ஒரு பாடல் வரிகளான"ஓட்டு போட்ட மனிதரெல்லாம் ஓட்டாண்டிதாங்க.....! ஓட்டு கேட்ட மனிதரெல்லாம் கோடீஸ்வரங்க....!" என்பது தான் நினைவுக்கு வருகிறது.

இங்கே நமது தேசத்தின் மூத்த குடிமகன், ஸாரி! மூத்த குடிமகளான மரியாதைக்குரிய ஜனாதிபதி பிரதீபா பாட்டில் செல்வழித்த கணக்குகளை படித்தால் தலை சுற்றுகிறது.

கடந்த 2007ஆம் ஆண்டு இந்தியாவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரதீபா பாட்டில். இவரது பதிவிக்காலம் முடிவதற்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் இவர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட கணக்கு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதியான பிரதீபா பாட்டில் இதுவரை 12 முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இவரது பயணங்களில் இதுவரை 22 நாடுகளுக்கு சென்றுள்ள அவருக்காக அரசு தரப்பிலிருந்து ரூபாய் 205 கோடிக்கு மேல் செலவழிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சுற்றுப்பயணத்தின் போதும் ஜனாதிபதி அவர்கள் போயிங் 747-400 ரக விமானத்தில் தான் பயணம் செய்வாராம். இதற்காகவே ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அரசு இதுவரை 169 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. அத்தோடு மட்டுமா? ஒவ்வொரு பயணத்தின் போது தன்னுடைய குடும்ப உறுப்பினர்களையும் அழைத்துச்செல்வாராம். கிட்டத்தட்ட 36 கோடி ரூபாய் பணத்தை வெளியுறவுத்துறை அமைச்சகம் செலவழித்துள்ளது. இது கூட வெளிநாட்டு பயணத்திற்காக அல்ல. மாறாக உள்நாட்டு பயணம், தங்கும் செலவும், உணவு போன்றவற்றிற்காக செலவழிக்கப்பட்ட தொகையாகும்.

பிரதீபா பாட்டில் பயணம் செய்ததற்கான பில் மற்றும்  விபரங்களை ஏர் இந்தியா நிறுவனம்  பாதுகாப்புத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது. இதுவரை அமைச்சகம் 153 கோடி ரூபாய் பணத்தை ஏர் இந்தியா நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது.

பிரேசில், மெக்ஸிகோ, சிலி, பூத்தான், வியட்நாம், இந்தோனேசியா, ஸ்பெயின், போலாந்து, ரஷியா, தஜகிஸ்தான், பிரிட்டன், சிப்ரஸ், சீனா, லோவஸ், கம்போடியா, துபாய், சிரியா, தெற்கு கொரியா, சுவிட்ஜர்லாந்து, ஆஸ்திரியா போன்ற நாடுகளில்   மொத்தம் 79 நாட்களுக்கு ஜனாதிபதி தங்கியுள்ளார்.

இவருக்கு முன்பாக ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் 7 முறைதான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதில் 17 நாடுகளுக்கு சென்றுள்ளார். அதற்கு முன்னால் ஜனாதிபதியாக இருந்த கே.ஆர். நாராயணன் 6 பயணங்களில் மொத்தம்10 நாடுகளுக்கு மட்டுமே பயணம் செய்துள்ளார். சங்கர் தயால் ஷர்மா 4 முறை பயணம் மேற்கொண்டு 16 நாடுகளுக்கு சென்றுள்ளார். மற்ற ஜனாதிபதிகளின் பயண விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் அவர்கள் அனைவரையும் விட தற்போதையை ஜனாதிபதிக்காக செலவழிக்கப்பட்ட தொகையே அதிகம் என கூறப்படுகிறது.




பெண்ணியம், கலாச்சாரம், பண்பாடு என்று முக்காடோடு கூப்பாடு போடும் பிரதீபா பாட்டில், ஆண்களும் பெண்களும் அறை நிர்வாணமாக திரியும் வெளிநாட்டு கடற்கரைகளில் பொழுதை கழிக்கும் காட்சி!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக