ஞாயிறு, ஏப்ரல் 08, 2012

போப்ஸ்கஞ்ச் துப்பாக்கிச்சூடு சாதாரணமானது:பீகார் அரசுக்கு அமெரிக்க வாழ் இந்திய முஸ்லிம் அமைப்பு கண்டனம்!


புதுடெல்லி:பீகார் மாநிலத்தில் போப்ஸ் கஞ்சில் 4 அப்பாவி முஸ்லிம்கள் காவல்துறையால் அநீதிமாக சுட்டுக் கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தை சாதாரணமானது என்று உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்த பீகார் அரசின் செயல் கண்டனத்திற்குரியது என்று அமெரிக்க வாழ் இந்திய முஸ்லிம்களின் அமைப்பான அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில்(ஐ.எம்.எம்.சி) கூறியுள்ளது.

இதுக்குறித்து ஐ.எம்.எம்.சியின் துணைத் தலைவர் அஹ்ஸன் கான் கூறியது: குற்றவாளிகளான போலீசாருக்கு எதிராக தெளிவான ஆதாரங்கள் இருந்த பொழுதும் அவர்கள் மீது அரசு வழக்கு பதிவுச் செய்யவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவோ, நீதி கிடைக்கவோ முயலாத அரசு சம்பவத்தை சாதாரணமாக சித்தரித்து சொந்த குடிமக்களை கொலைச்செய்த கொலையாளிகளை நியாயப்படுத்துகிறது.
சி.பி.ஐ விசாரணைக் குறித்த கோரிக்கையை அரசு அங்கீகரிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
போப்ஸ் கஞ்சில் நடந்த துப்பாக்கிச்சூடுக் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் அரசின் விளக்கம் கேட்ட நீதிமன்றத்தில் பீகார் அரசு அளித்த பதில், இச்சம்பவம் சாதாரணமானது என்பதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக