உடல்நலக்குறைவால் அவதியுறுவதால், அமெரிக்கா சென்று சிகிச்சை பெற ஏமன் அதிபர் சலோ திட்டமிட்டுள்ளார். ஏமன் அதிபராக கடந்த 33 ஆண்டுகளாக இருந்துவந்த அலிஅப்துல்லா சலே அரசுக்கெதிராக கடந்த ஆண்டு ஜனவரியில் (ஒருவருடமாக) மக்கள் புரட்சி ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அரேபிய தீபகற்பத்தில் உள்நாட்டு போருக்கு வழிவகுக்கும் என மேற்குலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. எனினும் அதிபர் சலே பதவிவிலக மறுத்தார்.
இந்நிலையில் ஏமன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மாற்றியமைக்க முடிவு செய்தார் சலே. விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடத்த சம்மதித்ததாக கூறப்படுகிறது. அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வகை செய்யும் மசோதாவும் நேற்று முன்தினம் ஏமன் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.இதைத்தொடர்ந்து அதிபர் சலே , டி.வி.யில் அளித்த பேட்டியில், அமெரிக்கா சென்று சிகிச்சை பெற நாட்டைவிட்டு வெளியேறுகிறேன். கடந்த கால தவறுகளை ஏமன் மக்கள் மன்னிக்வேண்டும். விரைவில் நாடு திரும்புவேன்.இவ்வாறு சலே கூறினார்.
An
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக