திங்கள், ஜனவரி 23, 2012

இந்திய குடியரசு தின விழாவில் தாய்லாந்து பிரதமர் யிங்லுக் ஹினவத்ரா கலந்து கொள்கிறார் !

Thailand PM participated in Indian Republic day.
 இந்தியா உடனான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை, மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்த வாரம் நடக்க உள்ள குடியரசு தின விழாவில், தாய்லாந்து பிரதமர் யிங்லுக் ஷினவத்ரா,44, கலந்து கொள்கிறார். வரும் 26ம் தேதி, டில்லியில் நடக்க உள்ள குடியரசு தின விழாவில், தாய்லாந்து பிரதமர் யிங்<லுக் ஷினவத்ரா தலைமை விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். இதற்காக இவர், நாளை இந்தியாவுக்கு வருகிறார். கடந்த 30 ஆண்டுகளில், இந்தியாவுக்கு வந்த தலைமை விருந்தினரில், இவர் தான் மிகவும் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.யிங்லுக் ஷினவத்ராவுடன், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோர் அடங்கிய, 100 பேர் கொண்ட குழுவும் வருகிறது.

இவரது இந்தப் பயணத்தில், இருதரப்பு பொருளாதார மற்றும் அரசியல் ரீதியிலான உறவுகளை, மேலும் வலுப்படுத்தும் விதத்தில், சில பேச்சுவார்த்தைகள் நடக்க உள்ளன. இதில், வர்த்தகம், அறிவியல் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் தூதரகம் ஆகிய துறைகள், முக்கிய இடம் பெறுகின்றன.அதோடு, குற்றவாளிகள் அல்லது கைதிகளை நாடு கடத்துவது தொடர்பான புதிய ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தாகிறது.

இது பற்றிய ஒப்பந்தம் ஒன்று, 1902ல் கையெழுத்தானது. அதன் பின், 1982ல், இதற்காக ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டும் செய்யப்பட்டிருந்தது.பிரதமர் அளவில் நடக்கும் பேச்சு வார்த்தையில், இந்தாண்டின் இறுதிக்குள், விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான முயற்சிகள் நடக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.இவை தவிர, கடற்கரை பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடற்கொள்ளை வழக்குகள் ஆகியவை உள்ளிட்ட, பாதுகாப்பு தொடர்பான விஷயங்களும் விவாதிக்கப்பட உள்ளன.

இருதரப்பு வர்த்தகம், 2011 நவம்பர் மாதம் வரை, 746 கோடி டாலராக அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில், தாய்லாந்துக்கான இந்திய ஏற்றுமதி, 472 கோடி டாலராகவும், இறக்குமதி 274 கோடி டாலராகவும் அதிகரித்துள்ளன.தாய்லாந்தில் பூர்வீக இந்தியர்களைத் தவிர, 2 லட்சத்து 50 ஆயிரம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களில், 90 ஆயிரம் பேர், சீக்கியர்கள் மற்றும் சிந்திகள்.


An

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக