திங்கள், ஜனவரி 23, 2012

சீனாவில் இன்று டிராகன் புத்தாண்டு. 15 நாட்கள் கோலாகல கொண்டாட்டம் !

Dragon newyear starts in China.சீனாவில் இன்று புத்தாண்டு பிறப்பதையொட்டி, நேற்று முதல், 15 நாட்கள் கொண்டாட்டம் துவங்கியது. இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.சீனாவில் கி.மு. 500ம் ஆண்டில், நாள்காட்டி சீர மைக்கப்பட்டது. இது சூரிய சந்திர நாள்காட்டி என அழைக்கப்படுகிறது. இளவேனிற்பருவத்தில் இந்த நாள் காட்டியின்படி புத்தாண்டு துவங்கும். அதனால், இது வசந்த விழா
எனவும் அழைக்கப்படும்.
சீன வானியல்படி, மொத்தம் 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு விலங்குகள் அடையாளமாகக் குறிக்கப்படும். அந்த விலங்கின் பெயரால் அந்த ஆண்டு குறிக்கப்படும். அதன்படி, இன்று டிராகன் ஆண்டு பிறக்கிறது. "டிராகன்'என்பது சீன தொன்மத்தில் வரும் ஒரு கற்பனை விலங்கு."டிராகன்' அரசக் குடும்பங்களின் அடையாளமாக சீனாவில் அறியப்படுகிறது. அடிக்கடி, வெள்ளம் மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில், நீரின் தெய்வமாகவும் கருதப்படுகிறது. தற்போது சீனாவைக் குறிக்க இந்த "டிராகன்' தான் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

சீனாவில் இன்று, "டிராகன்' புத்தாண்டு பிறப்பதை ஒட்டி, இன்று முதல், 15 நாட்கள் வசந்த விழா நடக்கும். இதில் கலந்து கொள்வதற்காக இடம் பெயர்ந்து வாழும் 134 கோடி பேர், தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர். இதுதான், ஆண்டுதோறும் நடக்கும் உலகின் மிகப் பெரிய இடப்பெயர்வாகக் கருதப்படுகிறது.புத்தாண்டை ஒட்டி, அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் தடுப் பதற்காக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புத்தாண்டு, சீனாவில் மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், மக்காவு, தென் கொரியா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சீனா உள்ளிட்ட இந்த நாடுகளில் புத்தாண்டிற்காக, ஒன்று முதல் நான்கு நாட்கள் வரை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக