பாஜகவுக்கு ஆதரவாக உத்தரபிரதேச சட்டப்பேர்வை தேர்தலில் பிரசாரம் செய்யமாட்டேன் என உமாபாரதி கூறியதாக வெளியான செய்தியை அவர் மறுத்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில், மாயாவதி கட்சியிலுள்ள பாபு சிங் என்பவர் ஊழல் செய்ததாக சிபிஐ சோதனை அவர் வீட்டில் நடந்ததைத் தொடர்ந்து மாயாவதி தன் கட்சியிலிருந்து பாபு சிங்கை நீக்கினார். ஆனால், பாஜக உடனடியாக பாபு சிங்கைத் தன் கட்சியில் சேர்த்துக் கொண்டது.
இதற்கு எதிராக, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான உமாபாரதி உத்தரபிரதேச தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யமாட்டேன் என்று எதிர்ப்பு கிளப்பியதாக தகவல்கள் வெளியாகின. இதனை உமாபாரதி மறுத்துள்ளார்.இது தொடர்பாக உமாபாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"என்னைப் பற்றி அடிப்படை ஆதாரமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. நான் உத்தரபிரதேசத்தில் பாஜகவுக்காக பிரசாரம் செய்ய மாட்டேன் என்று சொல்லவில்லை. உ.பி.யில், 4 நாட்களில் 30 பொதுக்கூட்டங்களில் பேச இருக்கிறேன். அடுத்தகட்ட சுற்றுப்பயணத்தைப் பாஜக மேலிடம் அறிவிக்கும்."
என உமாபாரதி கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக