வெள்ளி, ஜனவரி 06, 2012

பாஜக மிகப்பெரிய ஊழல் கட்சி: கல்யாண்சிங் கடும்தாக்கு !


பாஜக மிகப்பெரும் ஊழல் கட்சி" என உத்தரபிரதேச பாஜக முன்னாள் முதல் அமைச்சர் கல்யாண்சிங் கடுமையாக தாக்கியுள்ளார்.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பாபுசிங் குஷ்வாகா, பாஜகவில் சேர்ந்தது பற்றி ஜன கிராந்தி கட்சி தலைவர் கல்யாண் சிங் திடுக்கிடும் தகவலைத் தெரிவித்துள்ளார்.
"பாபுசிங் குஷ்வாகா, பாஜகவில் சேர்ந்தது சந்தேகத்தை எழுப்புகிறது. இதன் பின்னணியில் கோடிக்கணக்கான ரூபாய் பண பேரம் இருக்கலாம் என்று தோன்றுகிறது
. இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.
பா.ஜனதா தலைவர்கள் ஒருபுறம் ஊழலுக்கு எதிராக யாத்திரை நடத்துகிறார்கள். மற்றொரு புறம், ஊழல்பேர்வழிகளை கட்சியில் சேர்த்துக் கொள்கிறார்கள். இது அவர்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. அக்கட்சி மிகப்பெரிய ஊழல் கட்சி என்பதை நிரூபித்து விட்டது. அது தேர்தலில் 45 தொகுதிகளுக்கு மேல் ஜெயிக்காது."
மேற்கண்டவாறு கல்யாண்சிங் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக