ஊழல் குற்றச்சாட்டினைத் தொடர்ந்து மாயாவதியின் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பாபு சிங்கைப் பாஜக தன் கட்சியில் சேர்த்துக் கொண்டதிலிருந்து அக்கட்சியின் ஊழலுக்கு எதிரான எண்ணம் எத்தகையது என்பது எங்களுக்குப் புரிந்து விட்டது என அன்னா ஹஸாரே குழு தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊழல் புரிந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியினைச் சேர்ந்த பாபு சிங் குஷ்வாஹாவின் வீட்டில்,
கடந்த புதன் கிழமை அன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இதனைத் தொடர்ந்து பாபு சிங் குஷ்வாஹா பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால், ஊழல் குற்றச்சாட்டினால் மாயாவதியின் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட குஷ்வாஹாவைப் பாஜக உடனடியாக தன் கட்சியில் சேர்த்துக் கொண்டது.
இதற்கு எதிராக அன்னா குழு கடுமையான விமர்சனம் செய்துள்ளது.
"மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பாபு சிங் குஷ்வாஹாவை, பாரதிய ஜனதா சேர்த்துக்கொண்டதன் மூலம் மிகப்பெரிய தவறிழைத்துள்ளது. இதன் மூலம் ஊழலுக்கு எதிரான லோக்பால் விஷயத்தில் இவர்களின் அக்கறை குறித்து சந்தேகம் எழுந்திருக்கிறது" என அன்னா குழுவைச் சேர்ந்த சஞ்சய் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், "தேர்தல் காரணமாக உத்தரப்பிரதேசத்தில் ஊழல் பேர்வழிகளும் சமூக விரோதிகளும் பல்வேறு கட்சிகளில் சேர்வதைப் பார்க்கும்போது நாட்டின் ஜனநாயகம் என்னாகுமோ என்ற கவலை எழுகிறது" என்றும் அவர் கூறினார்.
மேலும், "தேர்தல் காரணமாக உத்தரப்பிரதேசத்தில் ஊழல் பேர்வழிகளும் சமூக விரோதிகளும் பல்வேறு கட்சிகளில் சேர்வதைப் பார்க்கும்போது நாட்டின் ஜனநாயகம் என்னாகுமோ என்ற கவலை எழுகிறது" என்றும் அவர் கூறினார்.
"பாஜக-வின் இந்த நடவடிக்கையால், அவர்கள் உண்மையாகவே லோக்பால் மாசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்களா? என்று சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது. இந்த நடவடிக்கையிலிருந்து லோக்பால் விஷயத்தில் பாஜகவின் அக்கறை எத்தகையது என்று எங்களுக்குப் புரிந்து விட்டது" என அன்னா குழு பாஜகவைக் கடுமையாக விமர்சித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக