குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிஜேபியின் பிரதமர் வேட்பாளராக களமிறக்குவதற்கு, அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் கட்காரி ஆதரவு தெரிவித்துள்ளார். அத்துடன், தேசிய அளவில் பிஜேபியை வழிநடத்துவதற்கு மோடியிடம் திறமை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிதின் கட்காரியின் தலைவர்
பதவி முடிவுக்கு வரும் நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டியளிக்கையில், "நான் ஒருபோதும் பிரதமர் வேட்பாளராக போட்டியிடமாட்டேன். பிஜேபியின் தலைவராவதற்கும், பிரதமராவதற்கும் மோடி தான் மிகவும் பொருத்தமானவர்.
எனது தலைமைப் பொறுப்பை நீட்டித்துக்கொள்ள விரும்பவில்லை. ஒரு சாதாரண தொண்டனாக கட்சிப் பணியைத் தொடர விரும்புகிறேன். தலைவர் பொறுப்பை மோடி ஏற்பதற்கு எனது ஆதரவைத் தெரிவிப்பேன்.
பிரதமர் வேட்பாளரைப் பொருத்தவரை, பிஜேபி உரிய காலகட்டத்தில் சரியாக தேர்வு செய்யும்," என்றார் கட்காரி.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த உமா பாரதி, உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது குறித்து விளக்கம் அளிக்கையில்,
"உமா பாரதி ஒரு தேசிய தலைவர். இத்தாலியில் பிறந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அமேதியில் போட்டியிட முடியும் என்றால், உமா பாரதி மாநிலம் மாறி போட்டியிடுவதில் என்ன பிரச்னை?" என்று கேள்வி எழுப்பினார், நிதின் கட்காரி.
An
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக