சிறந்த இலக்கிய நூல்கள் தமிழ் மொழியில் அதிக அளவில் வெளிவருவதை மேலும் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்; ஏழ்மை நிலையில் உள்ள எழுத்தாளர்கள் ஏற்றம் பெற வேண்டும்; என்ற நோக்கத்தின் அடிப்படையில், தமிழில் சிறந்த நூல்களுக்காக வழங்கப்படும் நிதியுதவியினை 25,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் வருமான வரம்பை 25,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
An
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக