திங்கள், ஜனவரி 23, 2012

நைஜீரிய தாக்குதலுக்கு ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் கடும் கண்டனம் !

நைஜீரியாவில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு ஜநா பொதுச்செயலர் பான் கீ-மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:  "மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் கடும் கண்டனத்துக்குரியது. இது போன்ற தாக்குதல்களால் பல அப்பாவி மக்கள் பலியாகின்றனர். மனித உயிர்களுக்கு எதிராக நடத்தப்படும்
தாக்குதல்கள் ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது. நைஜீரிய மக்களுக்கும், குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறேன். இதற்கு காரணமானவர்கள் கண்டிப்பாக சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
நைஜீரியாவில் வெள்ளிக்கிழமை போலீஸ் நிலையங்களின் மீதும், கானோ நகரில் உள்ள உளவுத்துறை அலுவலகங்கள் மீதும் தீவிரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர். இதில் இந்தியர் ஒருவர் உள்பட 160 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
An

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக