கொள்ளையர்களை தண்டிக்க வேண்டிய நீதிபதியே, கொள்ளையர்களை ஜாமீன் எடுத்த கேவலமான நிகழ்வு தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. அண்மை காலமாக சிவகங்கை மாவட்டம்,காளையார கோவிலில கொள்ளைச சம்பவங்கள அதிகரித்து வந்துள்ளது. எப்போது சிக்குவான் கொள்ளையன் என்று பொறிவைத்து காத்திருந்த பொதுமக்களுக்கு நேற்று தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கொள்ளையடிக்க முயன்ற இரண்டு கொள்ளையர்களை பிடித்தனர். அவர்களை நைய புடைத்த பொதுமக்கள் பின்னர் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.
கொள்ளையர்கள் காவல்துறையில் இருப்பதை தெரிந்து கொண்ட தேவகோட்டையை சேர்ந்த நீதிபதி சரவணகுமார் என்பவர் விரைந்து வந்து 2 கொள்ளையர்களையும் தனது சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளார்.
நீதிபதியின் இந்த செயலை கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத காளையார்கோவில் மக்கள் அவரது எதிராக போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
நீதிபதிக்கு எதிரான இந்த போராட்டத்தில் வணிகர்களும் தங்கள் கடைகளை அடைத்துக் கொண்டு பொதுமக்களுடன் கைகோர்த்துள்ளனர்.
நீதிக்கு தலைவணங்கும் மக்கள் நமது நாட்டில் இருக்கும்போது நீதிபதி ஒருவரின் செயல் நீதியை தலைகுனிய வைத்துள்ளது. இப்படிப்பட்ட நீதிபதியால் பொதுமக்களுக்கு நீதி கிடைக்காது என்பது உண்மையாகி விட்டது. இதனால் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் இதில் நேரிடையாகவே தலையிட்டு அந்த கறைபடிந்த நீதிபதியை தூக்கி எறியவேண்டும்.
இப்படிப்பட்ட நீதிபதி மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நீதிமன்றங்கள் மீதும், நீதிபதிகள் மீதும் மக்களுக்கு நம்பிக்கையில்லாமல் போய்விடும். இதனால் பல விளைவுகள் ஏற்படும் என்பது உண்மை.
கொள்ளையர்களுடன் கூட்டு வைத்திருக்கும் இந்த நீதிபதியின் தீர்ப்பு எப்படி இருந்திருக்கும் என்பது தற்போது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. கொள்ளையர்களுடன் காவல்துறையினர் தான் கூட்டு வைத்துள்ள நிகழ்வுதான் அரங்கேறி வருகிறது. தற்போது நீதிபதியும் கூட்டு சேர்ந்துள்ளதுதான் வேடிக்கையும், வேதனையுமாக இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக