திங்கள், ஜனவரி 09, 2012

சைஃபுல்: நீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறேன், ஆனால் மறுமையில் தண்டணையை அனுபவித்தே ஆகவெண்டும்


சைஃபுல்: நீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறேன், ஆனால் மறுமையில் தண்டணையை அனுபவித்தே ஆகவெண்டும்ஓரினப் புணர்ச்சி வழக்கில் அன்வார் விடுதலையானதைத் தாம் ஏற்றுக்கொள்வதாக அன்வார் மீது வழக்குத் தொடர்ந்த சைஃபுல் புகாரி அஸ்லான் தெரிவித்தார். “நீதிமன்ற முடிவை ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் மறுமை உலகில் ( இறந்தப் பின்) நிச்சயம் தண்டனை கிடைக்கும் என 26 வயதான சைபுல் புகாரி அஸ்லான் தெரிவித்தார் அன்வாரின் இப்ராஹிமின் அரசியல் செயலாளரான சைபுல், அன்வார் தம்மை பல முறை ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாக
வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், போதுமான ஆதாரங்கள் இல்லாததால் இவ்வழக்கில் தீர்ப்பு நாளான இன்று, பக்காத்தான் கட்சித் தலைவர் அக்குற்றஞ்சாட்டிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
தாம் எப்போதும் போல நிதானமாக இருக்கப் போவதாகவும், நீதிபதி டத்தோ முகமது சபிடின் முகமது டியா அளித்த தீர்ப்பை பொறுமையாக ஏற்றுக்கொள்வதாக சைஃபுல் புகாரி அஸ்லான் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக