திங்கள், ஜனவரி 09, 2012

முஸ்லீம்களுக்கு 9 % இட ஒதுக்கீடு : சல்மான் குர்ஷித்


உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் வருவதை ஒட்டி முஸ்லீம் வாக்கு வங்கியை குறிவைத்து தாங்கள் உத்தர பிரதேச தேர்தலில் வென்றால் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு 9 % இட ஒதுக்கிடு உள் ஒதுக்கீடாக வழங்கப்படும் என்று மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.
உத்தரபிரதேசத்தில் உள்ள ஃபரூக்காபாத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தன் மனைவி லூயிஸுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வந்த சல்மான் குர்ஷித்
 தேர்தல் பிரசார மேடையில் இத்தகவலை தெரிவித்தார்.
முஸ்லீம்களில் மன்சூரி, குரேஷி உள்ளிட்ட எட்டு ஜாதிகள் இந்த இட ஒதுக்கீட்டால் பலன் பெறும் என்றும் சல்மான் குர்ஷித் கூறினார். ஏற்கனவே 27 சதவிகித பிற்படுத்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டில் 4.5 சதவிகிதம் முஸ்லீம்களுக்கு ஒதுக்க ஐக்கிய முண்ணணி அரசு முடிவெடுத்ததையும் நினைவு கூர்ந்தார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக