திங்கள், ஜனவரி 09, 2012

அன்வார் விடுதலை: நடந்தது என்ன?


கோலாலம்பூர், 9 ஜனவரி: இன்று காலை 8.30 மணியளவில் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் நீதிமன்ற வளாகத்தினுள் நுழைந்தார். நீல நிற சட்டை, கருப்பு நிற காற்சட்டை அணிந்திருந்த அன்வார் நீதிமன்றத்திற்குள் வந்ததும் ஆதரவாளர்கள் அவரைப் பின்தொடர்ந்து
வந்து கூச்சலிடத் தொடங்கினர். இதனால் சிறிதுநேரம் பதற்றம் நிலவியது.
ஏறக்குறைய 5000 அன்வார் ஆதரவாளர்கள் “Reformasi”, “Hidup Anwar”, “Keadilan”, “Allahuakbar” எனத் தொடர்ந்து உரக்க கோஷமிட்டனர்.
அதற்கு முன்னதாகவே அன்வார் இப்ராஹிமுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பக்காத்தான் கட்சித் தலைவர் அஸ்மின் அலி, தேசிய இலக்கியவாதி டத்தோ A.சாமாட் மற்றும் முன்னாள் வழக்கறிஞர் மன்றத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் ஆகியோரும் நீதிமன்றத்திற்கு வருகைப் புரிந்தனர்.
காலை 8.50 மணிக்கு அன்வார் இப்ராஹிம் நீதிமன்றத்தினுள் நுழைந்தார்.
பின்னர், நீதிபதி வழக்கில் இதற்கு முன்னர் முன்வைக்கப் பட்ட சாட்சியங்களையும் ஆதாரங்களையும் பார்வையிட்டப் பின்னர், அன்வார் ஓரினப் புணர்ச்சியில் ஈடுப்பட்டதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
தீர்ப்பு வாசிக்கப்பட்டவுடன் நீதிமன்ற வாசலில் திரண்டிருந்த அன்வார் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
10.05 மணிவாக்கில் அன்வார் தமது குடும்பத்தினருடன் நீதிமன்ற கட்டிடத்திலிருந்து வெளியேறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக