புதுடெல்லி:விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பதாபவன் பள்ளிக்கூட ஹாஸ்டலில் படுக்கையில் சிறுநீர் கழித்த ஐந்தாம் வகுப்பு மாணவியை வலுக்கட்டாயமாக சிறுநீர் குடிக்கவைத்த சம்பவம் குறித்து பிரதமர் அலுவலகம்(பி.எம்.ஒ) பல்கலைக்கழகத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.விஸ்வ பாரதியின்
இந்நிலையில், மாணவியின் தந்தை அளித்த புகாரைத் தொடர்ந்து ஹாஸ்டல் வார்டன் உமா போடார் கைது செய்யப்பட்டுள்ளார். வார்டனை பல்கலைக்கழகத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். படுக்கையில் சிறுநீர் கழித்ததால் மாணவியின் பெட்சீட்டை பிழிந்து வார்டன் குடிக்கவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
மாணவியை அன்றைய தினமே அவரது தந்தை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குழுவை நியமித்தது. ஆனால், மாணவியை நிர்பந்தித்து சிறுநீரை குடிக்கவைக்கவில்லை என்று பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நீக்கும் சிகிட்சையாக கருதி குடிக்கவைத்ததாக வார்டன் மாணவியின் தாயிடம் நியாயப்படுத்தியுள்ளார்.
அதேவேளையில் ஹாஸ்டலில் அத்துமீறி நுழைந்த மாணவியின் பெற்றோரை போலீஸ் கைது செய்தது. நேற்று போல்பூர் நீதிமன்றத்தில் வார்டனும், பெற்றோர்களும் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக