செவ்வாய், ஜூலை 10, 2012

ஜோஷி கொலை வழக்கு:பிரக்யாசிங்கிடம் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் தடை !

Sunil Joshi murder case- SC restrains NIA to quiz Pragya Singhபுதுடெல்லி:ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷி கொலைச் செய்யப்பட்ட வழக்கில் ஹிந்துத்துவா பெண் தீவிரவாதி பிரக்யாசிங் தாக்கூரிடம் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு ஏஜன்சிக்கு(என்.ஐ.ஏ) உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.கடந்த மே 17-ஆம் தேதி மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் பிரக்யாசிங்கிடம் விசாரணை
நடத்தலாம் என அனுமதி அளித்திருந்தது. இந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளான சி.கே.பிரசாத், ஹெச்.எல்.தத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தடைவிதித்து தீர்ப்பளித்துள்ளது.
பிரக்யாசிங் தற்பொழுது போபால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், அஜ்மீர் உள்ளிட்ட ஐந்து குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர் அபினவ் பாரத் என்ற ஹிந்துத்துவா பயங்கரவாத அமைபைப்பைச் சார்ந்தவரான பிரக்யாசிங்.
முன்னர் மலேகான் வழக்கில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்  லெஃப்டினண்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித், சுதாகர் திரிவேதி ஆகியோரிடம் விசாரணை நடத்தவும் உச்சநீதிமன்றம் தடைவிதித்திருந்தது.
மலேகான் குண்டுவெடிப்பு உள்பட பல்வேறு குண்டுவெடிப்புகளில் சூத்திரதாரியாக கருதப்படும் சுனில் ஜோஷி கடந்த 2007-ஆம் ஆண்டு டிசம்பர் 29-ஆம் தேதி மர்மமான முறையில் கொல்லப்பட்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக