செவ்வாய், ஜூலை 10, 2012

கெளரவக் கொலை:புதுத் தம்பதிகளை கொலைச்செய்து கால்வாயில் வீசிய கொடூரம் !

Couple murdered for honour, bodies dumped in canalமோகா(பஞ்சாப்):ஆஃப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் குற்றம் செய்த பெண்கள் கொடூரமாக கொலைச் செய்யப்படுவதாக செய்திகளை பரப்பி வரும் நமது மீடியாக்கள் இந்தியாவில் தொடர்ந்து அரங்கேறிவரும் கெளரவக் கொலைகள் குறித்து முக்கியத்துவம் அளிப்பதில்லை. இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் பகபுரானா மாவட்டத்தில் திருமணமான புது தம்பதிகளை கொலைச்செய்து கால்வாயில் வீசிய கொடூரச் சம்பவம்
அரங்கேறியுள்ளது. இது கெளரவக் கொலை என்றும் இதுத்தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் அறிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் கொலைச் செய்யப்பட்ட இளம்பெண்ணின் தந்தையும், சகோதரனும் அடங்குவர்.
மோகா மாவட்டத்தில் ஃபுலேவாலாவைச் சார்ந்த குல்வந்த் கவுரும், அவரது கணவர் ஜகதார் சிங்கும் ராய்க்கோட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்டனர். காரில் கடத்தப்பட்ட இவர்களை கொலைச் செய்தபிறகு கால்வாயில் வீசியுள்ளனர். இம்மாதம் 2-ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தம்பதியினரை காணவில்லை என கூறி ஜகதாரின் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்திருந்தனர். தொடர்ந்து நடத்திய தேடுதலில் இறந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இளம்ப்பெண்ணின் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் புரிந்த இருவரும் ராய்க்கோட்டில் வசித்து வந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக