
நரேந்திர மோடியை சர்வாதிகாரி என்றும், பொய்களில் புரள்பவர் என்றும் கேசுபாய் குற்றம் சாட்டியிருந்தார். மோடிக்கு எதிராக பல்வேறு பொதுக் கூட்டங்களையும் அவர் நடத்தி வருகிறார்.
குஜராத்தில் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் துவங்கிய சன்ஸ்தா காங்கிரசும், சிமன்பாய் பட்டேல் 80களில் துவக்கிய ஜனதா மோர்ச்சா கட்சியும், 1986-இல் சங்கர்சிங் வகேலா துவக்கிய ராஷ்ட்ரீய ஜனதா கட்சியும் நீண்ட நாள் நீடிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டும் பொழுது கேசுபாய் பட்டேல் ஆதரவாளர்கள் இதனை மறுக்கின்றனர்.
மொராஜி தேசாய் சன்ஸ்தா காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய போது குஜராத் மாநிலத்தில் அந்தக் கட்சிதான் 2-வது பெரிய கட்சியாக இருந்தது. பாரதிய ஜனதா கட்சியை அதன் பின்னர்தான் மக்கள் ஏற்றுக் கொண்டனர் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குஜராத் மாநிலத்தில் கேசுபாயின் புதிய கட்சி காங்கிரசுக்கு சாதகமாக அமையலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக