ஜோர்டான்:நீதிக்கான போராட்டத்திலும், தற்காப்பு போரிலும் தியாகத்தின் வழியில் ஃபலஸ்தீனை மீட்க அதன் மண்ணின் மைந்தர்கள் உறுதிப் பூண்டுள்ளார்கள் என்று பிரபல ஹமாஸ் தலைவர் காலித் மிஷ்அல் கூறியுள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த ஷஹீத் கமால் கனாஜா நினைவு தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டு
உரைநிகழ்த்தினார் மிஷ்அல்.
அவர் மேலும் கூறியது: ‘தற்காப்பு போரே எங்களுடைய போராட்ட தந்திரம். இந்த தந்திரத்தின் பின்னணியில் இதர முயற்சிகள் அணி திரளும். உயிர் தியாகத்தின் மதிப்பையும், பலனையும் நாம் அடையாளம் கண்டுள்ளோம். இதர செயல்பாடுகள் பலனற்றவை. இறை மார்க்கத்தில் உயிரை சமர்ப்பித்த ஆயிரக்கணக்கான மக்கள் ஹமாஸின் வரலாற்றில் இடம்பெற்றுள்ளனர்.
எகிப்தின் புதிய சரித்திரம் உயிர்த்தெழலை குறிக்கிறது. நம்பிக்கை தரும் சம்பங்களை அங்கே காண்கிறோம். இது வெற்றி அருகில் உள்ளது என்ற நற்செய்தியை ஃபலஸ்தீன் மக்களுக்கு அளிக்கிறது.’ இவ்வாறு காலித் மிஷ்அல் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக