புதன், ஜூலை 04, 2012

சத்தீஷ்கர் அரசு மனித உரிமை மீறல்களில் பிரசித்திப் பெற்றது – மத்திய அமைச்சர் !

Kishore Chandra Deoராய்ப்பூர்:சட்டீஷ்கர் பா.ஜ.க அரசுக்கு மனித உரிமை மீறல்களில் பிரசித்திப்பெற்ற பின்னணி உண்டு என்று மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கிஷோர் சந்திரதேவ் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை சட்டீஷ்கரில் மாவோயிஸ்டுகள் என குற்றம்சாட்டி அப்பாவிகளான 19 கிராமவாசிகளை சி.ஆர்.பி.எஃப் படையினர் அநியாயமாக சுட்டுக்கொன்ற பயங்கர சம்பவம் குறித்து பதிலளிக்கையில் அமைச்சர்
இவ்வாறு தெரிவித்தார்.
ஒரு தனியார் சேனலுக்கு பேட்டியளித்த கிஷோர், மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துடன் இதுத் தொடர்பாக பேசவிருப்பதாக தெரிவித்தார்.
15 வயதான சிறுமி உள்பட 15க்கும் 28 வயதுக்கும் இடைப்பட்ட 10 பேர் கொலைச் செய்யப்பட்டுள்ளதாக இடதுசாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒன்று அல்லது இரண்டு மாவோயிஸ்டுகள் அங்கே சில வேளை இருந்திருக்கலாம். ஆனால், நிரபராதிகளான கிராமவாசிகளை கொலைச் செய்தது, போலீஸ் மற்றும் துணை ராணுவ படையினர் மீது வெறுப்பு உருவாக காரணமாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்(சி.பி.ஐ) பொதுச்செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தவேண்டும் என்று சி.பி.ஐ கோரிக்கை விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக