செவ்வாய், ஜூலை 03, 2012

ஃபலஸ்தீன் மக்களுக்கு உறுதுணையாக இருப்போம்: முஹம்மது முர்ஸி

Mursi Vows to Support Palestinians, Respect Existing Treatiesகெய்ரோ:ஃபலஸ்தீன் மக்களின் உரிமைகள் முழுமையாக கிடைக்கும் வரை அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி தெரிவித்துள்ளார். அதிபராக பதவியேற்ற பின்னர் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய துவக்க உரையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.ஃபலஸ்தீன் மக்கள் இழந்த அனைத்து உரிமைகளையும்
மீட்டெடுக்க எகிப்து மக்களும், அரசும் உறுதுணையாக இருக்கும் என பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் முர்ஸி அறிவித்தார்.
உயர் அரசியல் சாசன நீதிமன்றத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட முர்ஸி, கெய்ரோவில் ராணுவ பயிற்சி மையத்திற்கு சென்று ராணுவ அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக அதிகாரத்தை பெற்றுக்கொண்டார்.
முர்ஸிக்கு அனைத்துவிதமான ஒத்துழைப்பையும் அளிப்பதாக ராணுவ தலைமை தளபதி ஃபீல்ட் மார்ஷல் முஹம்மது ஹுஸைன் தன்தாவி உறுதி அளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக