செவ்வாய், ஜூலை 03, 2012

அப்துல் கலாமுடன் தேனிலவு முடிந்தது?- சோனியா விவகாரத்தில் பால் தாக்கரே கோபம் !

Bal Thackeray hits out at Kalam, calls him hypocriteமும்பை:’எடுப்பார் கைப்பிள்ளையாக’ சங்க்பரிவார சக்திகள் கருதிய அப்துல் கலாம் விரைவில் வெளியிடவிருக்கும் நூலில் சோனியாவை பிரதமராக பதவியேற்புச் செய்ய தான் தயாராக இருந்ததாக கூறியுள்ளார் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில்சோனியாவை வெளிநாட்டவர் என்று கூறி கைபர் போலன் கணவாய் வழியாக
இந்தியாவுக்குள் ஊடுருவிய ஆரிய பரம்பரையைச் சார்ந்த ஹிந்துத்துவா சக்திகளுக்கு அப்துல் கலாமின் கருத்து கோபத்தை ஏற்படுத்துவது இயல்பே. இந்நிலையில் அப்துல் கலாமிற்கு பால் தாக்கரே தனது அர்ச்சனையை துவக்கியுள்ளார்.
அப்துல் கலாம், ‘டர்னிங் பாயின்ட்’ என்ற தன் புதிய புத்தகத்தில், “2004ல் நடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்,சோனியா பிரதமராக பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும், சோனியா கேட்டிருந்தால், அவரை பிரதமராக்கியிருப்பேன்” எனத் தெரிவித்துள்ளார். இதற்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி அதிருப்தி தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சிவசேனா கட்சிப் பத்திரிகையான ‘சாம்னா’வில், பால்தாக்கரே கூறியுள்ளதாவது:
சோனியாவை பிரதமராக்க தயாராக இருந்ததாக, அப்துல் கலாம் தெரிவித்திருப்பதன் மூலம்,அவர் நகைப்புக்கு இடமாகியுள்ளார். பல ஆண்டுகளுக்குப்பின், அவர் இதைத் தெரிவித்திருப்பதன் மூலம், மக்களின் மனதில் அவர் பிடித்திருந்த இடத்தை இழந்து விட்டார். மக்களின் பார்வையில் அவரின் செயல் கபட நாடகமாகியுள்ளது. சோனியா பிரதமராவதை தடுத்து நிறுத்தியவர் கலாம் தான் என்ற தகவல், இதுநாள் வரை மக்கள் மத்தியில் உலாவிக் கொண்டிருந்தது. இதற்காக நாடு அவரை பாராட்டிக் கொண்டிருந்தது. ஜனாதிபதிபதவியிலிருந்து அவர் ஓய்வு பெற்ற பின்னரும், இதற்காக அவரை பலர்புகழ்ந்து கொண்டிருந்தனர்.
“சோனியாவை பிரதமராக்க தயாராக இருந்ததாக, இப்போது தெரிவித்திருப்பதை, கலாம் 10 ஆண்டுகளுக்கு முன்னரே தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், சுயநலம் காரணமாக அமைதியாக இருந்து விட்டார்.
அப்துல் கலாம், பொக்ரானில் நடத்திய அணுகுண்டு சோதனை கூட நாட்டிற்கு பலன் தரவில்லை.ஆனால், சோனியா பற்றி அவர் சமீபத்தில் வெளியிட்ட தகவல், உலக அளவில் இந்தியாவின் கவுரவத்தை பாழ்படுத்தி விட்டது. கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும் என, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் விரும்பின. அப்படி அவர் பிரதமர் பதவிக்கான வேட்பாளராகி, இந்த தகவலை வெளியிட்டிருந்தால், அது தேசிய ஜனநாயக கூட்டணியை அவமானப்படுத்தும் செயலாகி விடும். இப்போதைய சம்பவங்களை பார்க்கும் போது, பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடக்க உண்மையிலேயே கலாம் தான் காரணமா என்ற சந்தேகம் எழுகிறது.” இவ்வாறு தாக்கரே கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக