
கடந்த வாரம் ஜப்பானின் பிரதமர் யோஷிஹிகோ நோடா பாராளுமன்ற கீழ்சபையில் விற்பனை வரியை 5 சதத்திலிருந்து 10 சதமாக உயர்த்தும் மசோதாவை தாக்கல் செய்தார். இம்மசோதா பெருவாரியான உறுப்பினர்களின் ஆதரவுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எனினும் இம்மசோதாவிற்கு மேல் சபை ஒப்புதல் அளிக்கவில்லை.
2015-ல் விற்பனை வரியை இரு மடங்காக உயர்த்துவது குறித்த பிரதமரின் இந்த மசோதா பாராளமன்றத்தின் 469 வாக்குகளில் 363 வாக்குகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆளும் குடியரசு கட்சியின் உறுப்பினர்களில் 57 பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
பிரதமரின் இந்த மசோதா 3 வருடங்களுக்கு முன் குடியரசு கட்சியின் தேர்தல் வாக்குறுதியை மீறுவதாக குடியரசு கட்சியின் முக்கிய உறுப்பினரான ஒசாவா குற்றம் சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஒசாவா தனிக்கட்சி ஆரம்பிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக