
முன்னர் பஸ்ஸார் கூறுகையில், இஸ்ரேல் விமானம் சஞ்சரிக்கும் வான் எல்லையில் துருக்கி விமானம் சஞ்சரித்தது எனவும், சுட்டு வீழ்த்திய பிறகே அது துருக்கி விமானம் என்பது தெரியவந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
துருக்கி விமானத்தை சிரியா சுட்டு வீழ்த்திய சம்பவம் இருநாடுகள் இடையே மோதல் சூழலை உருவாக்கியிருந்தது. சிரியாவின் நடவடிக்கைக்கு பதிலடிக் கொடுப்போம் என துவக்கத்தில் துருக்கி பிரதமர் எர்துகான் அறிவித்திருந்தார். சிரியாவின் நடவடிக்கையை அங்கீகரிக்க முடியாது என்பது நேட்டோவின் நிலைப்பாடு. அதேவேளையில் மூத்த அதிகாரிகள் உள்பட 85 பேர் துருக்கியில் அபயம் தேடியதாக துருக்கி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
2011-ஆம் ஆண்டு சிரியாவில் மக்கள் எழுச்சிப் போராட்டம் துவங்கியதில் இருந்து ராணுவத்தினர் பலர் துருக்கியில் அபயம் தேடியுள்ளனர். அதேவேளையில் சிரியாவில் படுகொலைகளுக்கும் பஞ்சமில்லை. திங்கள் கிழகை நடந்த தாக்குதலில் 78 பேர் கொலைச் செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக