டெல்அவீவ்:துன்பத்தை சகித்தாவது எகிப்தில் ராணுவ ஆட்சியை நிலைநாட்டுவோம் என இஸ்ரேலின் ராணுவ உளவுத்துறை தலைவர் அவிவ் கோச்சாவி தெரிவித்துள்ளார்.எகிப்திய ராணுவத்தில் இஸ்லாமியவாதிகள் ஆதிக்கம் பெற்றால் கனவில் கூட பாராட்டமாட்டோம். ‘எகிப்தில் ராணுவ ஆட்சியை யூத அரசு என்ன விலை
கொடுத்தேனும் பாதுகாக்கும்’ என கோச்சாவி மேலும் தெரிவித்துள்ளார்.
தங்களின் அதிகாரத்தை சினாய் பகுதியில் நிலைநிறுத்தவும், எல்லையை நிர்ணயிக்கவும் முன்னர் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யஹூத் பாரக் எகிப்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். எகிப்து-இஸ்ரேலுக்கும் இடையே அமைதியை பாதிக்கும் விவகாரமாக இது மாறும் என அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக