புதன், ஜூலை 04, 2012

ஈரான் மக்கள் தண்டனைகளையும், மிரட்டல்களையும் சந்திக்க தயாராக உள்ளனர் – அஹ்மத் நஜாத் !

டெஹ்ரான்:ஈரான் மக்கள் கடந்த 33 ஆண்டுகளாக செருக்குப் பிடித்த பெரும் நாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தண்டனைகளையும், மிரட்டல்களையும் அவர்கள் சந்திக்க அவர்கள் தயாராகவே உள்ளனர் என்று ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார்.மேலும் நஜாத் கூறியது: நாட்டின் மொத்த வருமானத்தில் வெறும் 10 சதவீதம் மட்டுமே பெட்ரோல் மூலம்
கிடைக்கிறது. தடையை எதிர்கொள்ளும் விதத்தில் பெட்ரோலை கையாள ஈரான் மக்கள் தயாராக உள்ளனர். ஈரான் குடியரசு அதன் லட்சியங்களையும், விழுமியங்களையும் உறுதியாக பின்பற்றுவதுதான் இத்தகைய தாக்குதல்களுக்கு காரணமாகும்.
அழுத்தங்களுக்கு அடிபணியாமல், உறுதியாக நிற்கவும், எதிரியின் அரசியல் அபிலாஷைகளுக்கு பதிலளிக்கவும் நாம் கடமைப்பட்டுள்ளோம் என நஜாத் ஈரான் மக்களுக்கு நினைவூட்டினார்.
அமெரிக்கா பின்னோக்கி செல்கிறது. ஈரான் வளர்ச்சியின் பாதையில் சஞ்சரிக்கிறது. இஸ்லாத்தின் உதயத்திற்கு பின்னர் கண்ட மிகப்பெரிய புரட்சிகளில் ஒன்றுதான் ஈரானில் நடைபெற்ற இஸ்லாமிய புரட்சி என்று நஜாத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக