திங்கள், ஜூலை 02, 2012

இந்திய அரசு என்னை கைவிட்டு விட்டது’ – பாக்.சிறையில் இருந்து விடுதலையான சுர்ஜித் சிங் குற்றச்சாட்டு !

Surjit Singhபிகிதி(பஞ்சாப்):பாஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த சுர்ஜித்சிங் அண்மையில் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலையானார். இந்நிலையில் இந்திய அரசு மீது குற்றம் சாட்டி பேட்டி அளித்துள்ளார்.இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியது: 1968-ம் ஆண்டில் எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் என்னிடம் அதிக ஆசை
காட்டி உளவு வேலை பார்க்கச் சொன்னார். அதன்படி 80 முதல் 85 முறை பாகிஸ்தானுக்குச் சென்று பல முக்கிய தகவல்களைச் சேகரித்து வந்தேன். இதற்காக அன்வர் என்ற பெயரில் போலி அடையாள அட்டை வைத்திருந்தேன். 1982-ல் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டேன்.
நாட்டுக்காக எனது வாழ்க்கையையே தியாகம் செய்தேன். ஆனால் நான் சிறையில் அடைக்கப்பட்ட பின், இந்திய அரசு என்னையும், எனது குடும்பத்தையும் கைவிட்டு விட்டது. பஞ்சாபைச் சேர்ந்த மேலும் 20 பேர் லாகூர் சிறையில் இப்போதும் உள்ளனர். இவர்களில் பாதி பேர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக