புதன், மார்ச் 14, 2012

பயணிகள் கட்டணம் உயர்வுக்கு மம்தா எதிர்ப்பு - ரயில்வே அமைச்சர் ராஜினாமா?

மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி ரயில்வே பட்ஜெட்டை மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். 10 வருடங்களுக்குப் பிறகு பயணிகள் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. பயணிகள் கட்டண உயர்வுக்கு தினேஷ் திரிவேதியின் திரினாமுல் காங்கிரஸ் கட்சியே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் பேரணி ஒன்றில் பங்கேற்ற திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி
'' ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர்த்தப் படுவது குறித்து தங்களுக்குத் தெரியாது என்றும் பயணிகள் கட்டண உயர்வை அனுமதிக்க முடியாது ''என்றும் தெரிவித்துள்ளார். திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும் அமைச்சருமான சுதீப் பந்தோபாத்யாய '' பயணிகள் கட்டண உயர்வை திரும்பப் பெறுமாறு தினேஷ் திரிவேதியை வலியுறுத்தியுள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார். பயணிகள் கட்டண உயர்வை வாபஸ் பெறுமாறும் தவறினால் பதவியை விட்டு விலகுமாறும் தினேஷ் திரிவேதிக்கு மம்தா கட்டளையிட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் ராஜினாமா குறித்த கேள்விக்கு ''நோ கமெண்ட்ஸ்'' என்று பதில் அளித்துள்ளார் தினேஷ் திரிவேதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக