பிஷ்கேக்:ஆஃப்கானிஸ்தானில் பெண்களும், குழந்தைகளும் உள்பட 16 பேரை வெறித்தனமாக சுட்டுக் கொலைச் செய்த அமெரிக்க ராணுவ வீரன் மீது மரணத் தண்டனைக்கான குற்றம் பதிவுச் செய்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேட்டா தெரிவித்துள்ளார்.
படுகொலையைச் செய்த ராணுவ வீரனிடம் அமெரிக்க ராணுவ
சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படும் என்றும், மரணத்தண்டனை வரை கிடைக்கும் வாய்ப்புள்ளதாகவும் கிர்கிஸ்தானுக்கு செல்லும் வழியில் விமானத்தில் உடன் பயணித்த செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பனேட்டா கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தெற்கு காந்தஹார் மாகாணத்தில் பஞ்சவால் மாவட்டத்தில் உள்ள கொஸாயி, நஜீபான் ஆகிய கிராமங்களில் வீடுகளில் நுழைந்து தூங்கிக்கொண்டிருந்த அப்பாவி மக்களை வெறிப்பிடித்த அமெரிக்க ராணுவ வீரன் கண்மூடித்தனமாக சுட்டதில் குழந்தைகளும், பெண்களும் உள்பட 16 பேர் பலியாகினர். துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரன் குறித்த விபரங்களை அமெரிக்கா இதுவரை வெளியிடவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக