தூதரக ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி பி்ரச்னைக்கு தீ்ர்வு காண ஈரானுக்கு இன்னும் அவகாசம் அளிக்க வாய்ப்பு உண்டு என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார். அரசுமுறைப்பயணமாக அமெரிக்கா வந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்நெட்டன்யாகூ, அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினார். இருவரும் ஈரானின் அணு சோதனை விவகாரம் குறித்து விரிவாக விவாதித்தனர்.
பின்னர் ஒபாமா கூறுகையில், ஈரான் தனது அணுசோதனை விஷயத்தில் தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது. எதற்கும் ஒரு எல்லை உண்டு, தேவைப்பட்டால் ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து யோசிக்கலாம். அதுவரை தூரக ரீதியிலான பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண ஈரானுக்கு இன்னும் வாய்ப்பு காத்திருக்கிறது என்றார்.
இஸ்ரேலின் பரம எதிரி நாடான ஈரானின் அணுசோதனை, எங்கள் நாட்டிற்கு எந்தவித அச்சுறுத்தலை ஏற்படுத்தினாலும் அதனை நாங்களே தனியே எதிர்கொள்ளோம். ஈரானை எதிர்க்கும் திறமை எங்களுக்கு உண்டு என பெஞ்சமின்நெட்டன்யாகூ என்றார்.
முன்னதாக அமெரிக்கா-இஸ்ரேல் இடையே ராணுவ புலனாய்வு குறித்த ஒப்பந்தங்கள், ஒபாமா, நெட்டன்யாகூ இடையே அதிபரின் அதிகாரப்பூர்வ மாளிகையான ஓவல் மாளிகையில் கையெழுத்தானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக