துருக்கியில் பிரதமர் ரிசெப் தயிப் எர்டோகன் அலுவலகத்துக்கு அருகில் திங்கள்கிழமை நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் காயமடைந்தார். பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்ட குண்டு வெடித்ததாக என்டிவி தொலைக்காட்சி செய்தி தெரிவித்துள்ளது. குண்டு வெடிப்புக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்தான் பிரதமர் அலுவலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது குண்டு வெடிப்புக்குப் பின் போலீஸார் அப்பகுதியைச் சுற்றி வளைத்தனர். இரண்டாவது குண்டு வெடிக்க வாய்ப்புள்ளது என்று கருதி பொதுமக்கள் யாரையும் அருகில் விடவில்லை.
கடந்த வாரம் இஸ்தான்ஃபுல் பகுதியில் ரிமோட் குண்டு வெடித்ததில் 16 பேர் காயமடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்பு இஸ்ரேல் நடத்தி இருக்கும் என சந்தேகிக்கபடுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக