ஈரானுடன் இந்தியா தொடர்ந்து பொருளாதார உறவுகளை வைத்துக் கொள்ளுமேயானால் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா அச்சுறுத்தியிருப்பதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ஜூன் 28ஆம் தேதி வாக்கில் முடிவு எடுக்கப்படும் என்று அமெரிக்கா மிரட்டியிருப்பதாக அந்தச் செய்திகள் கூறுகின்றன. அதாவது இந்தியாவுக்கு 10 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள் ஈரானுடனான கச்சா எண்ணெய் இறக்குமதிகளை இந்தியா குறைக்கவேண்டும் என்று நிபந்தனை விதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்தாலும் இந்திய வணிகத்துறை அமைச்சகம் மற்ற துறைகளில் ஈரான்டுஅன் உறவுகள் வைத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதையும் அமெரிக்காவின் இஸ்ரேல் ஆதரவு கும்பல்கள் கவனிக்கத் தவறவில்லை.
அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம், இது குறித்து ஏற்கனவே கூறுகையில், சில இஸ்ரேல் ஆதரவு பிரச்சரகர்கள் இந்தியாவுக்கும் ஈரானுக்கும் உள்ள உறவு குறித்து தவறான செய்திகளை வெளியிட்டு வருவதாக தெரிவித்திருந்தது.
அமெரிக்காவில் உள்ள ஈரான் எதிர்ப்பு அணியினர் சர்வதேச எரிசக்தி முகமையிடைமிருந்து தகவல் பெற்று, இந்தியாவும், தென் கொரியாவும் ஜனவரி மாதம் ஈரானிலிருந்து கச்சா இறக்குமதியை அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது.
ஈரானிலிருந்து எந்த அளவுக்கு கச்சா இறக்குமதி செய்தால் பொருளாதாரத் தடையிலிருந்து தப்பிக்கலாம் என்ற அளவில் இந்தியா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகின்றன.
ஈரான் கச்சா இறக்குமதியைக் கைவிட்டு தங்கள் பிடியில் இருக்கும் சவுதி அரேபியா, மற்றும் ஈராக்கிடமிருந்து கச்சா இறக்கு மதி செய்ய இந்த நாடுகளை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக