பெங்களூரு:கடந்த மாதம் கர்நாடக சட்டப்பேரவையில் 3 அமைச்சர்கள் ஆபாசப்படம் பார்த்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர்கள் மட்டுமின்றி, 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ஆபாசப்படம் பார்த்துள்ளதாக விசாரணைக் குழு அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.
சட்டப்பேரவையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்தபோது, இது தெரியவந்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விசாரணைக் குழு முடிவு செய்யவில்லை என்றும் ஸ்ரீசைலப்பா தெரிவித்துள்ளார்.
விசாரணைக் குழுவின் அறிக்கைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பா.ஜ.க எம்.எல். ஏக்களின் கலங்கத்தை போக்கவே இவ்வாறு செய்வதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 7-ம் தேதி நடந்த சட்டப்பேரவை கூட்டத்தின் போது, பா.ஜ.க அமைச்சர்களான லக்ஷமன் சவதி, சி.சி.பாட்டீல் மற்றும் கிருஷ்ணா பலிமார் ஆபாச காட்சிகளை கைப்பேசியில் பார்த்த காட்சி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்களது அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக