சமீபகாலமாக அர்ஜெண்டினா மீண்டும் பாக்லாந்து பிரச்சினையை கையில் எடுத்துள்ளது. இதனால் இங்கிலாந்து- அர்ஜெண்டினா இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. அர்ஜெண்டினா திடீரென தாக்கி விடக்கூடாது என கருதி இங்கிலாந்து பாக்லாந்தில் படையை குவித்து வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தின் அதி நவீன போர் கப்பலான எச்.எம்.எஸ் டான்ப்லெஸ் பாக்லாந்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது தவிர நீர் மூழ்கி கப்பல்களும் அங்கு சென்றுள்ளன. அர்ஜெண்டினாவுடன் மோதல் காரணமாகத் தான் கப்பல் அனுப்பப்பட்டுள்ளதா? என்று இங்கிலாந்திடம் கேட்டபோது வழக்கமான ரோந்து பணிக்காகத்தான் கப்பல் அனுப்பப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக